கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய கோர்ட்

நியூயார்க் : கூகுள் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.

உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுக்க இணையத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் கூகுளுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு; ஆஸ்திரேலியாவில் கூகுள் நிறுவனம், டெல்ஸ்ட்ரா மற்றும் ஆப்டஸ் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்கள் விற்பனை செய்த ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் தேடுபொறி மட்டும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்தது.

இதனால் போட்டி தேடுபொறிகள் தடையடைந்தன. பதிலுக்கு, இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூகுளின் விளம்பர வருவாயில் ஒரு பங்கைக் பெற்றன. இந்த ஒப்பந்தம் நுகர்வோர் தேர்வை குறைத்து, போட்டியைத் தடை செய்கிறது எனக் கூறி ஆஸ்திரேலிய கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடிவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அபாரதம் விதிக்கப்பட்டது.

Exit mobile version