Featured
Featuredஉலகம்செய்திகள்

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், சைப்ரஸில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து கனடாவின் கனனாஸ்கிஸுக்கு திங்கள்கிழமை மாலை புறப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை கனடாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசுத் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளாா். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா்.

பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா்.

What's your reaction?

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *