Featured
Featuredஅரசியல்ஆன்மீகம்இந்தியாதமிழகம்

விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் புனித நாளில், ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தி:

பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். நம்பிக்கையும், பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும். கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகங்களில் அவரது வாழ்த்துச் செய்தி பரவி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார். புதிய தொடக்கங்களுக்கும், தடைகளை நீக்குவதற்கும் நாம் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.

இந்த நன்னாளில், நாம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பங்களிப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *