Listஅரசியல்இந்தியாசெய்திகள்

போர் விமானங்களை தயாரிக்கும் ஆலை: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்து வைத்தனர்

வதோதரா (குஜராத்), : ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா நிறுவனத்தின் ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் நேற்று (அக். 28) திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் ஆகியோர் இணைந்து இந்நிறுனத்தை திறந்து வைத்தனர்.

ராணுவ வீரர்கள் மற்றம் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட, விமானத்தில் இருந்து குண்டுகளை வீச, விஐபி பயணத்துக்குப் பயன்படுத்த என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட C-295 விமானங்களை முழுவதுமாக உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) குஜராத்தின் வதோதராவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் தொடங்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்-ம் இணைந்து இந்நிறுனத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்காக வதோதராவில் டாடா ஏர்பஸ் விமான அசெம்பிளி வசதி வளாகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இருந்து டாடா நிறுவனம் சி-295 விமானங்களைத் தயாரிக்க உள்ளது. இது புதிய இந்தியாவின் பணி கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

நாட்டின் சிறந்த மகனாக விளங்கிய ரத்தன் டாடாவை சமீபத்தில் இழந்தோம். இன்று அவர் நம்மிடையே இருந்திருந்தால், மகிவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், அவருக்கு மகிழ்ச்சியைத் தரும்.

இன்று இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இந்த நிலையை எட்டுவது சாத்தியமில்லை. அந்த நேரத்தில், இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி இருக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் புதிய பாதையில் நடக்க முடிவு செய்தோம். நமக்கென்று ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தோம். இன்று அதன் விளைவு நம் முன் உள்ளது” என்று தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன