செய்திகள்தமிழகம்

பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் 

சென்னை: அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதைக் கவர்னர் ஆர்.என். ரவி துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: “பல்கலைக்கழக மாணவர்களின் நலன் மற்றும் கல்வித் திறனில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பல்கலைகளிலும் குறித்த காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அக்டோபர் 31க்குள் அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவை நடத்த முடிக்க வேண்டும் என அனைத்து துணைவேந்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கவர்னர் 3 பல்கலைகளில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்கியதோடு, மேலும் 19 பல்கலைகளின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு 8,27,990 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார்.

அதன் விளைவாக, தமிழகத்தின் 19 அரசுப் பல்கலைக்கழகங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பட்டமளிப்பு விழாக்களையும் முடித்துள்ளன. இந்த சாதனை தமிழகத்தில் முதல் முறையாகும் எனக் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன